Monday, March 21, 2011

குடும்ப மகிழ்ச்சிக்கு தேவையிது - 5



கொஞ்சமே கொஞ்சம்தாங்க...

மனித நேயம்:-

தீதும் நன்றும் பிறர் தர வாரா.

நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொருப்பு. அன்றாடம் அநேகம் பேரைச் சந்திக்கிறோம், உதவி கேட்கிறோம், ஆணையிடுகிறோம், அனைத்து சந்தர்பங்களிலும் வெற்றிப் பெறுகிறோமா?. பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக விரக்தியும், தேவையற்ற பிணிகளும் வருகின்றன.

பிணிகள்:-

1) தலைவலி,

2) மன அழுத்தம்,

3) இதயவலி {ஹார்ட் ஹட்டாக்}

4) இரத்த அழுத்தம்,

5) நரம்பு தளர்ச்சி,

6) தீராத கவலை,

7) அமைதியின்மை,

8) மது, சிகரெட் போன்ற பழக்கங்கள்,

9) தூக்கமின்மை,

10) ஒத்துபோக இயலாமை,

11) உணர்ச்சி வசப்படுதல்,

12) அஜிரணம்
இப்படி மேலும் சில.

ஏன் இந்த நிலை?

1) நாம் மகிழ்வாக இருக்க,

2) பிறர் நம்மை விரும்ப,

3) பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர,

4) பிறரிடம் நம் காரியங்களை சாதித்துக் கொள்ள
இதற்கு மேலும் சில காரணங்கள்.


கீழ்காணும் கட்டளைகளை மட்டும் கடைப்பிடிக்க உறுதிக்கொள்ளுங்கள்.

1) அன்பு செலுத்துங்கள், அக்கறைக் காட்டுங்கள்.

2) ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

3) இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளை தவிர்த்து விடுங்கள்.

4) உணர்வுகளை மதிக்கவும், மரியாதைக் கொடுக்கவும், புகழவும்
கற்றுக் கொள்ளுங்கள்.

5) ஊக்கத்துடன் சுறுசுறுப்பாய் செயல்படுங்கள்.

6) எப்போதும் பேசுவதைக் கேட்டு பின் விளைவை யோசித்து
சரியான சைகை, முக பாவத்துடன் தெளிவாக பேசுங்கள்.

7) ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்துடன் பிறர்குறைகளை அலட்சியப்படுத்துங்கள்.

8) ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோஜிதம், இன்முகம்,
விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.

9) ஒவ்வொருவரையும் வெவ்வேறு, புதுப்புது வழிகளில்
கையாளுங்கள்.

10) ஓகோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

வளமாகவும், மகிழ்வாகவும், சீரும் சிறப்புடனும் எல்லா நலன்களும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக. உங்களின் முயற்சி. இறைவனின் அருள்.

No comments: