குடும்ப மகிழ்ச்சிக்கு தேவையிது - 4
குழந்தைகள் வளர்ப்பு:-
1) குழந்தைகளுக்கு முன் உங்கள் சண்டை சச்சரவுகளை வைத்துக் கொள்ளக் கூடாது.
2) உங்கள் கோபதபங்களை குழந்தைகள் மேல் காட்டக் கூடாது.
3) குழந்தைகள் மேல் உங்களில் ஒருவர் கோபப்படும்போது, குழந்தைகளுக்கு ஆதரவாகப் பேசக்கூடாது.
4) குழந்தைகள் தவறு செய்யாநிலையில் கோபட்டுபவரிடம் விபரம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
5) அக்கம் பக்கம் வீடுகளிலோ, வெளியிடங்களிலிருந்தோ குழந்தைகள் மேல் புகார் கூறும் போது, குழந்தைகளுக்கு ஆதரவாக மறுத்து பேசக்கூடாது. அதற்காக குழந்தைகளை அங்கேயே அடித்து திட்டுவதோக் கூடாது.
6) எங்கள் குழந்தை அவ்வாறு செய்யாது என புகார் கூறியவரிடம் சண்டைப் போடக்கூடாது. விசாரித்து தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்றுதான் கூற வேண்டும். குழந்தைகளை அவர்களின் முன்னாலேயே தேவைப்படின் விசாரிக்கலாம். மற்றவர்கள் குறைக் கூறும்படி நடந்துக் கொள்ளதேயென அறிவுரைக் கூறலாம்.
7) வீட்டில் தனிப்பட்டமுறையில் குழந்தைகளிடம் தீரவிசாரித்து அதற்கேற்றபடி முடிவு எடுக்க வேண்டும்.
8) குழந்தைகளை அன்பு காட்டி அரவணைக்க வேண்டும்.
9) பாசமென்ற வழியில் குழந்தைகளை பாழ்படுத்தி விடக்கூடாது.
10) எப்போதும் அறிவுரைகளாகவே சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.
11) குழந்தைகளிடையே வேறுபாடுக் காட்டக் கூடாது.
12) பெற்றோரைக் கண்டு பயப்படும்படி வளர்க்கக் கூடாது.
13) நம்மை மதிக்கும்படியாக நாம் நடந்துக் கொள்ள வேண்டும்.
14) நம் செயல்களே குழந்தைகளுக்கு முன்மாதிரியாக அமைவதால், நம் நடத்தை நல்லொழுக்கத்தை ஊட்டுவதாக அமைய வேண்டும்.
15) குழந்தைகளின் சந்தேகங்களுக்கு கவனித்தும், சரியான முறையிலும், புரியும் படியாகவும் பதில் அளிக்க வேண்டும்.
16) அக்கரையில்லாமலும், பொருப்பில்லாமலும், தவறாகவும், பொய்யாகவும், மாறுப்பட்ட பதில்களாக இருக்கக்கூடாது.
17) வயதுக்குப் பொருந்தாத சிறிய கேள்விகளோ, பெரிய கேள்விகளோ, மீறிய கேள்விகளோ இருப்பின்:-
சிறிய கேள்விகளுக்கு:- பதில் கொடுத்து விட்டு. இதை சின்ன வயதிலேயே அறிந்துக் கொண்டிருக்க வேண்டிய பதிலெனவும் புரிய வைக்க வேண்டும்.
பெரிய கேள்விகளாய் இருப்பின் உங்களுக்கு தெரிந்ததாக இருந்தால் முழுமையாக பொறுமையாகக் கூற வேண்டும். சிறிதுதான தெரியுமென்றால் தெரிந்த வரையும், தெரியாததாதை, தெரிந்துக் கொண்டு பதில் உரைப்பதாக சொல்ல வேண்டும்.
வயதுக்கு மீறிய கேள்விகள்:- தகுந்த நேரத்தில் விளக்குவதாக, புரிய வைப்பதாக சொல்ல வேண்டும். சரியான சமயத்தில் மறக்காமல் தெளிய வைக்க வேண்டும். எந்த விசயங்களும் குடும்ப வாழ்வில் மூடி மறைக்க வேண்டியநிலை இல்லை. எனவே தகுந்த சமயங்களில் உணர வைக்க வேண்டியதை, உரைக்க வேண்டியது பெற்றோர் கடமை.
18) குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்களையும், கடமைகளையும் சிறு வயதிலிருந்தே ஊட்ட வேண்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
19) குழந்தைகளுக்கு பய உணர்ச்சியை ஊட்டக் கூடாது. அதற்காக அசட்டு தைரியத்தையும், பகைமை, வெறுப்புணர்ச்சிகளையும் ஊட்டக்கூடாது.
20) அன்பு, பாசம், கடமை, பொறுப்புகளை சிறு வயதிலிருந்தே ஊட்டி வளர்க்க வேண்டும்.
மேலும் உங்களுக்கு தெரிந்த, நினைக்கின்ற, அவசியமானவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். உணர்வுகளை பதியுங்களேன், மற்ற அனைவரும் அறிந்துக் கொள்ள.
சிறிதே சிறிது அடுத்ததில்.......
No comments:
Post a Comment