Friday, September 5, 2014

மூத்த தலைமுறையில்

எங்கள் தந்தையின் இளைய சகோதரி திருமதி. ராஜம்மாள் ரங்கநாதன். தந்தை வழியில் தற்போது உயிருடன் இருப்பவர் இவர் ஒருவரே.
Only living member of my fathers side.She is 92 living in coimbatore
My paternal aunty



Sunday, March 24, 2013

குடும்பத்தில் சில நினைவுகள்

எங்கள் பெரியப்பா P.A.ராமனாதன் செட்டியார் அவர்களுக்கும், எங்கள் தகப்பனார் P.A.மாணிக்கம் செட்டியார் அவர்களுக்கும் பல பொருத்தங்கள் உண்டு. பெரியப்பா  1911ம் வருடமும்,   எமது தகப்பனார் 1921ம் வருடமும் என 10 வருட வித்தியாசத்தில் பிறந்தவர்கள். இருவரும் சரியாக 10 வருட வித்தியாசத்தில் 90 வயதில் இறைவனடி சேர்ந்தார்கள். சில உடல்நல மருத்துவங்கள் மேற்கொண்டாலும் கடைசி வரை நடமாடினார்கள். காதும், கண் பார்வையும்  இருந்தது. உணவில் எந்த கட்டுப்பாடும் தேவையற்ற நிலையிலேயே வாழ்ந்தார்கள். இப்படி பல பொருத்தங்கள் இருந்தன. உங்கள் குடும்பத்திலோ அல்லது தெரிந்தவர் குடும்பத்திலோ உண்டா? தெரிந்தவர்கள், பதிவு செய்யுங்களேன்.

Monday, March 21, 2011

குடும்ப மகிழ்ச்சிக்கு தேவையிது - 5



கொஞ்சமே கொஞ்சம்தாங்க...

மனித நேயம்:-

தீதும் நன்றும் பிறர் தர வாரா.

நமது அனைத்து நன்மை தீமைகளுக்கும் நாமே பொருப்பு. அன்றாடம் அநேகம் பேரைச் சந்திக்கிறோம், உதவி கேட்கிறோம், ஆணையிடுகிறோம், அனைத்து சந்தர்பங்களிலும் வெற்றிப் பெறுகிறோமா?. பல நேரங்களில் பகையும், பிரச்சனைகளுமே மிஞ்சுகின்றன. விளைவாக விரக்தியும், தேவையற்ற பிணிகளும் வருகின்றன.

பிணிகள்:-

1) தலைவலி,

2) மன அழுத்தம்,

3) இதயவலி {ஹார்ட் ஹட்டாக்}

4) இரத்த அழுத்தம்,

5) நரம்பு தளர்ச்சி,

6) தீராத கவலை,

7) அமைதியின்மை,

8) மது, சிகரெட் போன்ற பழக்கங்கள்,

9) தூக்கமின்மை,

10) ஒத்துபோக இயலாமை,

11) உணர்ச்சி வசப்படுதல்,

12) அஜிரணம்
இப்படி மேலும் சில.

ஏன் இந்த நிலை?

1) நாம் மகிழ்வாக இருக்க,

2) பிறர் நம்மை விரும்ப,

3) பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர,

4) பிறரிடம் நம் காரியங்களை சாதித்துக் கொள்ள
இதற்கு மேலும் சில காரணங்கள்.


கீழ்காணும் கட்டளைகளை மட்டும் கடைப்பிடிக்க உறுதிக்கொள்ளுங்கள்.

1) அன்பு செலுத்துங்கள், அக்கறைக் காட்டுங்கள்.

2) ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

3) இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளை தவிர்த்து விடுங்கள்.

4) உணர்வுகளை மதிக்கவும், மரியாதைக் கொடுக்கவும், புகழவும்
கற்றுக் கொள்ளுங்கள்.

5) ஊக்கத்துடன் சுறுசுறுப்பாய் செயல்படுங்கள்.

6) எப்போதும் பேசுவதைக் கேட்டு பின் விளைவை யோசித்து
சரியான சைகை, முக பாவத்துடன் தெளிவாக பேசுங்கள்.

7) ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்துடன் பிறர்குறைகளை அலட்சியப்படுத்துங்கள்.

8) ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோஜிதம், இன்முகம்,
விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.

9) ஒவ்வொருவரையும் வெவ்வேறு, புதுப்புது வழிகளில்
கையாளுங்கள்.

10) ஓகோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

வளமாகவும், மகிழ்வாகவும், சீரும் சிறப்புடனும் எல்லா நலன்களும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக. உங்களின் முயற்சி. இறைவனின் அருள்.

Sunday, March 20, 2011

குடும்ப மகிழ்ச்சிக்கு தேவையிது - 4

குடும்ப மகிழ்ச்சிக்கு தேவையிது - 4

குழந்தைகள் வளர்ப்பு:-

1) குழந்தைகளுக்கு முன் உங்கள் சண்டை சச்சரவுகளை வைத்துக் கொள்ளக் கூடாது.

2) உங்கள் கோபதபங்களை குழந்தைகள் மேல் காட்டக் கூடாது.

3) குழந்தைகள் மேல் உங்களில் ஒருவர் கோபப்படும்போது, குழந்தைகளுக்கு ஆதரவாகப் பேசக்கூடாது.

4) குழந்தைகள் தவறு செய்யாநிலையில் கோபட்டுபவரிடம் விபரம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

5) அக்கம் பக்கம் வீடுகளிலோ, வெளியிடங்களிலிருந்தோ குழந்தைகள் மேல் புகார் கூறும் போது, குழந்தைகளுக்கு ஆதரவாக மறுத்து பேசக்கூடாது. அதற்காக குழந்தைகளை அங்கேயே அடித்து திட்டுவதோக் கூடாது.

6) எங்கள் குழந்தை அவ்வாறு செய்யாது என புகார் கூறியவரிடம் சண்டைப் போடக்கூடாது. விசாரித்து தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்றுதான் கூற வேண்டும். குழந்தைகளை அவர்களின் முன்னாலேயே தேவைப்படின் விசாரிக்கலாம். மற்றவர்கள் குறைக் கூறும்படி நடந்துக் கொள்ளதேயென அறிவுரைக் கூறலாம்.

7) வீட்டில் தனிப்பட்டமுறையில் குழந்தைகளிடம் தீரவிசாரித்து அதற்கேற்றபடி முடிவு எடுக்க வேண்டும்.

8) குழந்தைகளை அன்பு காட்டி அரவணைக்க வேண்டும்.

9) பாசமென்ற வழியில் குழந்தைகளை பாழ்படுத்தி விடக்கூடாது.

10) எப்போதும் அறிவுரைகளாகவே சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.

11) குழந்தைகளிடையே வேறுபாடுக் காட்டக் கூடாது.

12) பெற்றோரைக் கண்டு பயப்படும்படி வளர்க்கக் கூடாது.

13) நம்மை மதிக்கும்படியாக நாம் நடந்துக் கொள்ள வேண்டும்.

14) நம் செயல்களே குழந்தைகளுக்கு முன்மாதிரியாக அமைவதால், நம் நடத்தை நல்லொழுக்கத்தை ஊட்டுவதாக அமைய வேண்டும்.

15) குழந்தைகளின் சந்தேகங்களுக்கு கவனித்தும், சரியான முறையிலும், புரியும் படியாகவும் பதில் அளிக்க வேண்டும்.

16) அக்கரையில்லாமலும், பொருப்பில்லாமலும், தவறாகவும், பொய்யாகவும், மாறுப்பட்ட பதில்களாக இருக்கக்கூடாது.

17) வயதுக்குப் பொருந்தாத சிறிய கேள்விகளோ, பெரிய கேள்விகளோ, மீறிய கேள்விகளோ இருப்பின்:-

சிறிய கேள்விகளுக்கு:- பதில் கொடுத்து விட்டு. இதை சின்ன வயதிலேயே அறிந்துக் கொண்டிருக்க வேண்டிய பதிலெனவும் புரிய வைக்க வேண்டும்.

பெரிய கேள்விகளாய் இருப்பின் உங்களுக்கு தெரிந்ததாக இருந்தால் முழுமையாக பொறுமையாகக் கூற வேண்டும். சிறிதுதான தெரியுமென்றால் தெரிந்த வரையும், தெரியாததாதை, தெரிந்துக் கொண்டு பதில் உரைப்பதாக சொல்ல வேண்டும்.

வயதுக்கு மீறிய கேள்விகள்:- தகுந்த நேரத்தில் விளக்குவதாக, புரிய வைப்பதாக சொல்ல வேண்டும். சரியான சமயத்தில் மறக்காமல் தெளிய வைக்க வேண்டும். எந்த விசயங்களும் குடும்ப வாழ்வில் மூடி மறைக்க வேண்டியநிலை இல்லை. எனவே தகுந்த சமயங்களில் உணர வைக்க வேண்டியதை, உரைக்க வேண்டியது பெற்றோர் கடமை.

18) குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்களையும், கடமைகளையும் சிறு வயதிலிருந்தே ஊட்ட வேண்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

19) குழந்தைகளுக்கு பய உணர்ச்சியை ஊட்டக் கூடாது. அதற்காக அசட்டு தைரியத்தையும், பகைமை, வெறுப்புணர்ச்சிகளையும் ஊட்டக்கூடாது.

20) அன்பு, பாசம், கடமை, பொறுப்புகளை சிறு வயதிலிருந்தே ஊட்டி வளர்க்க வேண்டும்.

மேலும் உங்களுக்கு தெரிந்த, நினைக்கின்ற, அவசியமானவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். உணர்வுகளை பதியுங்களேன், மற்ற அனைவரும் அறிந்துக் கொள்ள.



சிறிதே சிறிது அடுத்ததில்.......

Saturday, March 19, 2011

குடும்ப மகிழ்ச்சிக்கு தேவையிது - 3

குடும்ப மகிழ்ச்சிக்கு தேவையிது - 3


மகிழ்ச்சி குறைய காரணங்கள்:-

பொதுவாக கீழ்கண்ட சில காரணங்களால் தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி குறைய எந்தெந்தக் காரணங்கள் என்பதை குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக எழுதி கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

1. அடிக்கடி வரும் சண்டை சச்சரவுகள்.

2. ஒருவரை ஒருவர் குறை கூறும் பழக்கம்.

3. அவரவர் வாக்கை காப்பாற்ற தவறுதல்.

4. விரும்பியதை பெற இயலாமை.

5. ஒருவரை ஒருவர் நம்பாமை.

6. ஒருவர் மீது ஒருவர் அக்கரை காட்டுவதில்லை.

7. உல்லாசப்பயணம் போக இயலாமை.

8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.

9. விருந்தினர் குறைவு.

10. பொருட்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.

11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இல்லை.

12. விட்டுக் கொடுக்கும் பண்புகள் குறைவு.

13. ஒருவர் மனது புண்படும்படியாக மற்றவர் பேசுதல்.

14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.

மற்றும் வேறு சில காரணங்கள்.



உங்கள் பங்கு


உங்கள் குடும்பம் மகிழ்வாய் இருக்க அல்லது அதில் மகிழ்ச்சி குறைய தான் எந்த அளவு காரணம் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து குறைப்போக்கி மகிழ்ச்சி கொண்டு வர வேண்டும். குறை களைய சில:-

1) அன்பாக பேசுவது.

2) பிறர் மீது அக்கரைக் காட்டுவது.

3) வீட்டை அழகாக வைத்துக் கொள்வது.

4) குறைக் கூறாமல் இருப்பது.

5) சொன்னதை செய்துக் கொடுப்பது.

6) இன்முகத்துடன் இருப்பது.

7) முன் மாதிரியாக நடந்துக் கொள்வது.

8) பிறரை நம்புவது.

9) ஒன்றாக உல்லாச பயணம் போக விரும்புவது.

10) பணிவு.

11) எதையும் எடுத்த இடத்தில் வைப்பது.

12) பிறர் வேலைகளில் உதவுவது.

13) பிறருக்கு விட்டுக் கொடுப்பது.

14) பிறர் வருந்தும் போது ஆறுதல் கூறுவது.

15) சுறுசுறுப்பு.

16) சிறிய விஷசங்களைக் கூடப் பாராட்டுவது.

17) புதிய முயற்களை ஊக்குவிப்பது.

18) நகைச்சுவையாகப் பேசுவது.

19) அதிகமாக வேலை செய்ய விரும்புவது.

20) செலவுகளை குறைக்க ஆலோசனைக் கூறுவது.

21) நேரம் தவறாமை.

22) தற்பெருமை பேசாமல் இருப்பது.

23) தெளிவாகப் பேசுவது.

24) நேர்மை.

25) பிறர் மனத்தைப் புண்படுத்தாமல் இருப்பது.

மற்றும் உங்களுக்கு தோன்றும் நல்ல விசயங்களை, இத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள்.


நமக்காக மேலும் தொடரும்..........

Wednesday, March 16, 2011

குடும்ப மகிழ்ச்சிக்கு தேவையிது? - 2

ஏனுங்க புருசமார்களுக்கு சொன்னீக. பொண்டாட்டிமார்களுக்குனு.... ஏங்கிக்கிட்டு இருந்தவர்களுக்கு, இதோ... இதோ......


மனைவியிடம் கணவன் எதிர்ப்பார்ப்பது என்ன?


1. ஸ்கூல், ஆபீஸ் டயம் தெரிந்து அதற்கு முன் தயாரித்தல்.

2. காலை 6 மணிக்கு முன் எழுந்திருத்தல்.

3. எப்போதும் சிரித்த முகம். ( கிண்டல் செய்வது போல் அல்ல )

4. நேரம் பாராது உபசரித்தல்.

5. மாமியாரைத் தாயக மதிக்க வேண்டும்.

6. பெண்கள் விட்டுக் கொடுக்க வேண்டும்.

7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.

8. அதிகாரம் பண்ணக் கூடாது.

9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன் தம்பி பிரிப்புக் கூடாது.

10. கணவன் குறைகளை வெளியே சொல்லக் கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.

11. கணவனைச் சந்தேகப் படக் கூடாது.

12. குடும்ப விசயங்களை வெளியேச் சொல்லக் கூடாது.

13. பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.

14. வீட்டுக்கு வந்தவுடன் மற்றும் சாப்பிடும் போது பிரச்சனைகளைப் பேசக்கூடாது. ( தம்பி வந்தியதேவன்
சோமசுந்தரம் சொல்லிட்டேன் சரியா?)

15.கணவர் வழி உறவினரையும் நன்கு உபசரிக்க வேண்டும்.

16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.

17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.

18. குழந்தைப் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

19. கொடுக்கும் பணத்தில் சீராக குடும்பம் நடத்த வேண்டும்.

20. பிட்பாகெட் அடிக்கக் கூடாது.

21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

22. எதிர்காலத் திட்டங்களை சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.

23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.

24. தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.

25. அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்திற்கு ஆடை அலங்காரம் செய்ய வேண்டும்.

26. குழந்தைகளை கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.

27. கணவர் வீட்டுக்கு வரும்போது நல்ல அபிப்ராயம் வருவது போல் வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.

28. ருசியாக சமைக்க வேண்டும்.

29. அன்பாக பரிமாற வேண்டும்.

30. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

31. கடவுள் நம்பிக்கை வேண்டும்.

32. தெளிவாக பேச வேண்டும்.

33. எடுத்துரைக்கும் விதம் தெரிய வேண்டும்.

34. தேவையற்றதை வாங்கி பணமுடக்கம் செய்யக்கூடாது.

35. அதிகம் சினிமா, டிவி (சின்னத்திரை) பார்க்கக் கூடாது.

36. உடற்பயிற்ச்சி செய்து உடம்பை "ஸ்லிம்" ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.


கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஆதரவாய வாழ்வது எப்படி?

1. கணவன் - மனைவி ஒருமித்த உணர்வினராய் இருக்க வேண்டும்.

2. கணவன்பால் மனைவிக்குப் பரிவும் பாசமும் இயல்பாகவே ஏற்பட வேண்டும்.

3. ஏற்றத்தாழ்வான மனப்பான்மை அறவே இருத்தல் கூடாது.

4. ஈருள்ளங்களும் ஓர் உள்ளவுணர்வு பெற வேண்டும்.

உள்ள உணர்வு என்பது என்ன?

உணவிற்கு சுவைக்கு அதிகப்படியாக உப்பு இருக்கக் கூடாது. அதிகமானால் உணவு சுவைக்காது. அதுபோல வாழ்வில் ஊடல் (பிணக்கு) நீளக்கூடாது. நீண்டால் வாழ்க்கை இரசிக்காது. எனவே, கணவன் - மனைவியர் தம்பால் எழுகின்ற கருத்து வேறுபாடுகட்கு அவ்வேறுபாடுகளை மறந்து அன்பொத்த வாழ்க்கை வாழ வேண்டும். ஊடலைக் கசப்பாக்க் கொள்ளாது, தாம் கூடி வாழும் காதல் வாழ்விற்கு உரிய இன்ப நிகழ்ச்சியாக கருத வேண்டும். இதையே வள்ளவப்பெருந்தகை திருக்குறளின் எல்லைக் குறளாக,

" ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு
இன்பம் கூடி முயங்கப் பெறின். "

என்று கூறியுள்ளார். இவ்வுணர்வுகள் இருபாலரிடம் வேரூண்றித் தளிர்த்தால், பிணக்குகள் அறவே அகலும் என்பது ஒருதலை.



அப்பாடி பாதி தாண்டியாச்சி. மிச்சத்த அடுத்ததிலே.

என்னங்க அது?

படிச்சி பாருங்களேன், என்ன அவசரம்?

Monday, March 14, 2011

குடும்ப மகிழ்ச்சிக்கு தேவையிது - 1



1. வருமானம்
2. ஒத்துழைப்பு
3. மனிதநேயம்
4. பொழுதுபோக்கு
5. ரசனை
6. ஆரோக்கியம்
7. மனபக்குவம்
8. சேமிப்பு
9. கூட்டு முயற்சி
10. குழந்தைகள்



கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்
2. மனது புண்படும்படி பேசக்கூடாது
3. கோபப்படக்கூடாது
4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது
5. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்கக்கூடாது
6. பலர் முன் திட்டக்கூடாது
7. முக்கிய விழாக்களுக்கு சீர்ந்து போக வேண்டும்.
8. மனைவியுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்
9. சொல்வதை பொருமையாகக் கேட்க வேண்டும்.
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும், பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல, குழந்தை குடும்பம் என்று இருக்க வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டு பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்து செல்ல வேண்டும்.
15. வருடம் ஒரு முறையாவது சுற்றுளா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகள் படிப்பைப் பற்றிக் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாத்.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல், தனக்கு கிடைத்த மனைவியை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
21. மனைவியிடம் அடுத்தப் பெண்ணைப் பாராட்டக் கூடாது.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் மனைவிக்கும் இருக்கும் என்ற் எண்ண வேண்டும்.
23. மனைவி, குழந்தைகளுக்கு உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன சின்ன தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகளை செய்ய வேண்டும்.
26. குழந்தை அசிங்கம் செய்து விட்டால், "இந்தா உன் குழந்தை" என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்கக் கூடியவள் மனைவி.
28. நேரத்திற்கு சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டாம் என்றால், முன்கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லிவிட்டுச் செல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைவு வேண்டும்.
33. மனைவியின் பிறந்தநாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. தீயப்பழக்கங்கள் கூடாது (பொய், சூது, மது, மாது)
36. மாமியார் வீட்டில் எதிர் பார்க்கக் கூடாது.
37. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக்கூடது.
38. கைச்செலவுக்குப் பணம் தர வேண்டும்..



அடங்கொப்புரனே.... புருசனுக்கு மட்டும் சொல்லிட்டிங்க. பொண்டாட்டிக்கு கிடையாதானு கேக்காதிங்க. அவங்களுக்கும் வருது ஒரு லிஸ்டு அடுத்த பதிவு நெம்பர் 2வுலே...... தொடருகிறது..