Tuesday, August 21, 2007

நம்ம குடும்பமிது !!!

- 4 -

இப்போது நான் கூறுகின்ற செய்திகள் , எங்கள் முப்பாட்டனார் காலத்திலிருந்து எங்கள் வியாபாரத்தைப் பற்றியும், வீடு, ஊர் அமைப்புகளைப் பற்றியும் பொதுவான தகவல்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தைச் சேர்ந்ததாக இல்லாமல், தெரிந்ததை, கேள்விப்பட்டதை கூறுகிறேன். எங்கள் ஊருடன் மற்ற ஊர்களை இணைக்கும் முக்கியமான சாலை ( ) , எங்கள் ஊருக்கு வடப்புறத்தில் கிழமேற்காக செல்கிறது. மழை காலங்களில், ஊரின் வடபுறத்தில் உள்ள குன்றிலிருந்தும் , முக்கிய சாலையிலிருந்தும்,வடபுறத்திலுள்ள வீதிகளிலிருந்தும் தென்கிழக்கை நோக்கிச் செல்லும் மழைநீர் அதிக அளவில், எங்கள் வீடு வழியாக, இன்றும் செல்கிறது. பெருத்த அளவில் மொத்த, சில்லரை வியாபாரத்திலும் கொடிக்கட்டி பறந்ததாலும், மிராஸ்தாரர்கள் என்னும் நிலசுவாந்தாரர்கள் (நில உரிமையாளர்கள் )இருந்ததால், அதிக போக்குவரத்தும், இந்த வீதியில் தான். எனவே எங்கள் வீதிக்கு 'ராஜவீதி' என்ற பெயராம்.

Monday, August 20, 2007

நினைவுகளே நில்லுங்கள் !..........(1)

சிறு வயதிலேயே நோய்வாய் பட்டு படுக்கையிலும், தனிமையிலும் அதிக நாட்கள் கழிந்து வருவதால், சிறு வயது முதலே எண்ணங்கள் சுழன்றடித்தாலும், அவ்வப்போது சூழ்நிலைகளுடன் முடிந்து விடும். அதன் தாக்கம் தொடராது.
ஆனால் மாநகருக்கு குடிப்பெயர்ந்த பின் சுழன்றடிக்கும் வேகம் மிக அதிகமானது. மேலும் இந்த தரவுகள் (Blogs)ஆரம்பித்த பின்னோ, கட்டுப்படுத்த முடியாத அளவில் மிகமிக அதிகமாக உள்ளது. எதை முதலில் எழுதுவது. எப்படி,எதற்கு, ஏன், எவ்வாறு என்று பலக் கேள்விகள் இரவுபகலாக மண்டையை குடைந்துக் கொண்டே இருக்கிறது.
அதனால் தனித்திருக்கிறேன், விழித்திருக்கிறேன் பல நேரங்களில், எண்ணங்களின் வேகமான ஓட்டத்தினால், தரவுகளில் பதிப்பதற்கு கைகளுக்கு சக்தியில்லாமல் தடுமாறுகிறேன். பல நினைவுகள் நினைவோட்டத்திலிருந்து அவ்வப்போது விலகி சென்று மிண்டும் ஏதாவது ஒரு சமயத்தில் இணைகிறது, பிரிகிறது.
கூறுகின்ற செய்திகளை ரத்தின சுருக்கமாக கூறிவிட நினைக்கின்றேன். அது முடியும் செயலாக தெரியவில்லை. ஏனென்றால் நான் சொல்ல நினைக்கின்ற கருத்துகளை நீங்கள் முழுமையாக புரிந்துக் கொள்ளவேண்டும் என்ற ஆதங்கம் நிறைய இருப்பதால்.

Monday, July 30, 2007

நம்ம குடும்பமிது !!!

-3-

இது ஏதோ வாரிசுகளின் பட்டியலுக்காக மட்டுமில்லங்க,அறிமுக படலத்தை முடித்துவிட்டு,வரலாற்றை ஆரம்பிக்கலாமுனு இருந்தேங்க. ஆனா அறிமுக படலம் இன்னும் ரொம்ப நீளம் உள்ளது. அதனால் இத்துடன் நிறுத்திக் கொண்டு, அவ்வப்போது அந்த இடத்திற்கு ஏற்றப்படி வாரிசுகளின் அறிமுகத்தை, முடிந்தவரை உங்களுக்கு புரியும்படி விளக்க முயற்சி செய்கிறேன். எங்கள் அப்பா திரு.P.A.மாணிக்கம் செட்டியார் அவர்களுக்கு, தற்போது 87 வயது நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. அவர் தற்போது செய்ய,முடிக்க,செல்ல வேண்டிய கடமைகளென கருதுவதை, திரும்ப,திரும்ப நினைவுக்கு கொண்டு வந்து புதுபித்துக் கொள்கிறாரே தவிர, மிக பழைய மற்றும் பல நினைவுகள் ஒவ்வொன்றாய் அவரை விட்டு விலகுவதாகவே கருதுகிறேன்.ஏனென்றால் பல நிகள்வுகளை கேட்கும்போது, நினைவிலில்லை என கூறி விட்டு பிறிதொரு சமயத்தில், ஞாபகத்ததிற்கு வரும்போது கூறுகிறார்.தற்போதைய சூழ்நிலையில் எனக்கு தெரிந்தவரை, பழைய குடும்ப செய்திகளை அதிக அளவில் தெரிந்திருந்து கூறக் கூடியபெரியவர்கள், தகவல் தெரிந்தவர்கள் யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்பது தான்.நான் சிறு (5) வயதிலேயே, நோய்வாய் பட்டுவிட்டதால், எங்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் பலவற்றில் கலந்துக் கொண்டதுகூட கிடையாது. எப்போதாவது ஒரிரு முறைகள் கேள்விப்பட்ட செய்திகளே, பெரிய கதைப் போன்று இருந்ததாலும், என்னுடைய எண்ணங்களை வெளியிட, வடிகாலாய் கூகுள் வலைதள தரவு (google. blogspot.com)இருந்ததாலும்,கற்பனைக் கதைகளை எழுதுவதைவிட, ஒரு நிஜமான வரலாற்றையே படைத்து விடலாம் என்ற எண்ணம் தோன்றியதாலும்,மிக்க மகிழ்ச்சியுடன் எழுத ஆரம்பித்து விட்டேன். பிறகு தான் அதிலுள்ள சிரமங்களை உணர்ந்தேன். ஆனாலும் எனது அப்பா மற்றும் உறவினர்களின் ஒத்துழைப்புடன், வெற்றிகரமாக பதிப்பிப்பேன் என்ற நம்பிக்கையுடன்....... (உறவினர்களே ! இதில் விடுப்பட்ட, திருத்த வேண்டிய அல்லது தெரிந்த செய்திகள் இருப்பின், தயங்காமல், வருத்தப்படாமல் கூறுங்கள். மகிழ்வுடன் திருத்திக் கொள்ளலாம்.)

நம்ம குடும்பமிது !!!

-2-

முதல் தாரத்தின் ஒரே வாரிசாக Late.திரு.பாலி செட்டியார் அவர்கள் மட்டுமே. அவர்கள் குடும்பம் பாப்பிரெட்டிபட்டியிலேயே தொடர்ந்தது.அவர்கள் குடும்பத்தைப் பற்றி பிறகு தொடரலாம். அடுத்ததாக இரண்டாவது தாரமான Late.திருமதி.சுந்தர லட்சுமி அம்மாள் அவர்களின் மூன்று ஆண் நான்கு பெண் ஆக ஏழு வாரிசுகள். 1)எங்கள் பெரிய பாட்டனார் Late. திரு.வெங்கடாசலம் செட்டியார். இவர் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. மேற்கொண்டு இவரைப் பற்றி தெரிந்துக் கொள்ள வாய்ப்பில்லை. அடுத்தது இரண்டாவதாக எங்கள் பாட்டனார் Late.திரு.ஆதியப்ப செட்டியார்.இவரது மனைவி,@எங்கள் பாட்டியார். Late.திருமதி.கனக லட்சுமி அம்மாள்.3)எங்கள் கடைசி சிறிய பாட்டனார் Late.திரு.நாராயண செட்டியார்.இவரது மனைவி@ சிறிய பாட்டியார்.Late.திருமதி.சரஸ்வதி அம்மாள். எங்கள் பாட்டனார்களின் வாரிசுகளைப் பற்றி விபரங்கள் சேகரிக்க வேண்டியிருப்பதால், முதலில் எங்கள் பாட்டனார்.Late. திரு.பெ.ஆதியப்ப செட்டியார் & Late.திருமதி.கனக லட்சுமி அம்மாள் அவர்களின் வாரிசுகளைப் பற்றி தெரிந்ததை விளக்க முற்படுகிறேன். இவர்களுக்கு 2 ஆண்,2 பெண்,ஆக 4 வாரிசுகள். 1)பெரியப்பா.Late.திரு.P.A.ராமநாதன் செட்டியார், இவரது மனைவியார் @பெரியம்மா Late.திருமதி.தனலட்சுமி அம்மாள்,ஆகிய இவர்களுக்கு 7 ஆண், 3 பெண் ஆக 10 வாரிசுகள். 2)பெரிய அத்தை @ அத்தம்மா. Late.திருமதி.வஜ்ஜிரம் அம்மாள்,இவரின் கணவர்.மாமா@மாமிய்யா. சேலம்.கண்ணங்குறிச்சி Late.திரு.ராதாகிருஷ்ண செட்டியார்.அக்காலத்தில் புகழ் பெற்ற "சாதூஸ் காபி" நிறுவனர் மற்றும் தயாரிப்பாளருமாவார்.இவர்களுக்கு 4ஆண்,4 பெண் ஆக 8 வாரிசுகள். அடுத்ததாக எங்கள் அப்பா திரு.P.A.மாணிக்கம் செட்டியார், இவரின் மனைவியும்,எங்கள் தாயாருமான Late.திருமதி.M.பாக்கிய லக்ஷ்மி அம்மாள் ஆகிய இவர்களுக்கு 7பெண்,3 ஆண் ஆக 10 வாரிசுகள். எங்கள் சிறிய அத்தையின் அறிமுகத்திற்கு பிறகு எங்கள் குடும்பத்தைப் பற்றி தொடர்கிறேன். 4) கடைசியும், சிறிய அத்தை.திருமதி.ராஜலட்சுமி அம்மாள், இவரின் கணவர்.மாமா @மாமிய்யா.Late.திரு.O.C.R.R.ரங்கநாதன் செட்டியார். இவர்களுக்கு 5 ஆண் 4 பெண் ஆக 9 வாரிசுகள்."சேலம் லாட்ஜ்" என்ற பெயரில் கோயமுத்தூரில் தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டலை சிறப்பாக நடத்தியவர். அடுத்ததாக எங்கள் குடும்ப அறிமுகத்தை ஆரம்பிக்கலாமா ?

Friday, June 22, 2007

நம்ம குடும்பமிது !!!

-1-


முன்னால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாப்பிரெட்டிபட்டி கிராமத்திலிருந்து, தற்போதைய தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி தாலுக்காவை சேர்த்த பையர்ந்ததம் என்ற கிராமத்திற்கு, சுமார் 175 வருடங்களுக்கு முன் பொட்டல்வெளியாய், குக்கிராமமாய் இருந்த இந்த ஊருக்கு, எமது தகப்பனாரின்(திரு.P. A .மாணிக்கம் செட்டியாரின் பாட்டனார்.திரு.பெத்தண்ண செட்டியார்(அப்பாவின் தாத்தா), வியாபார நிமித்தமாய் குடிபெயர்ந்தாராம். இவருக்கு இரண்டு மனைவிகளாம். முதல் மனைவி திருமதி.(...........................) அவர்களுக்கு ஒருமகனும், முதல் மனைவி காலமானபின், இரண்டாவது மனைவியாக ( திருமதி. சுந்தர லட்சுமி ) அவர்களைத் திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மனைவிக்கு மூன்று மகன்கள். அவரின் மனைவியோ, வாழும் இந்த ஊரே கிராமம். அப்படியிருக்கையிலே, பொட்டல்வெளியான குக்கிராமத்திற்கு,உடன் வர மறுத்து விட்டாராம். அதனால் விதவையான அவரின் சகோதரி உடனிருந்து கவனித்துக் கொள்ள, சிறிது காலம் கழிந்த பின்பு மனம் மாறியவர். கணவருடன் வாழ வந்திருக்கிறார். அவர்களின் வாரிசுகளாக.......

Thursday, June 7, 2007

இருக்குதுங்க !!!!.......

எவ்வளவோ இருக்குதுங்க, நம்ம குடும்பத்தைப் பத்தி எழுத. ஆவலாக காத்திருக்கிறேன்.உங்க தகவலையும் கருத்துக்களையும் அறிய.இனிய உறவினர்களே! நம்ம குடும்பத்தைப் பற்றி ஒருவருக்கொருவர் அறியாத்தை, நாம் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவலினால் ஆரம்பித்திருக்கிறேன்.அதனால் இதில் ஏதேனும் தகவல்கள் விடுப்பட்டாலோ, தவறுகள் இருந்தாலோ, உங்களுக்கு தெரிந்த தகவல்களையும் தயங்காமல் தெரிவியுங்கள்.திருத்தங்களை வெளியிடலாம். ஓரிரு நாளிலே நான் எழுத ஆரம்பிச்சிடுறேங்க!

அன்புடன் உங்கள்,
பத்ரி நாராயணன்.A.M.
07/06/2007.