எங்கள் பெரியப்பா P.A.ராமனாதன் செட்டியார் அவர்களுக்கும், எங்கள் தகப்பனார் P.A.மாணிக்கம் செட்டியார் அவர்களுக்கும் பல பொருத்தங்கள் உண்டு. பெரியப்பா 1911ம் வருடமும், எமது தகப்பனார் 1921ம் வருடமும் என 10 வருட வித்தியாசத்தில் பிறந்தவர்கள். இருவரும் சரியாக 10 வருட வித்தியாசத்தில் 90 வயதில் இறைவனடி சேர்ந்தார்கள். சில உடல்நல மருத்துவங்கள் மேற்கொண்டாலும் கடைசி வரை நடமாடினார்கள். காதும், கண் பார்வையும் இருந்தது. உணவில் எந்த கட்டுப்பாடும் தேவையற்ற நிலையிலேயே வாழ்ந்தார்கள். இப்படி பல பொருத்தங்கள் இருந்தன. உங்கள் குடும்பத்திலோ அல்லது தெரிந்தவர் குடும்பத்திலோ உண்டா? தெரிந்தவர்கள், பதிவு செய்யுங்களேன்.
Sunday, March 24, 2013
Subscribe to:
Comments (Atom)